ஸ்ரீ ஜகதீஸ்வரி ராஜராஜேஸ்வரி

ஸ்ரீ ஜகதீஸ்வரி ராஜராஜேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகே ஜெய சரணம்

 

அருள்வாய் நீயே அம்பிகை தாயே

அபயம் அளிக்கும் அன்னையும் நீயே

                                           (ஸ்ரீ ஜகதீஸ்வரி)

அனைத்துலகிற்க்கும் தாய் நீ அம்மா

ஆதியும் அந்தமும் நீயே அம்மா

உன் மலர் பாதம் அபயம் அம்மா

                                           (ஸ்ரீ ஜகதீஸ்வரி)

இடக்கை கரும்பு அதனை போல

இனிக்கும் வாழ்வினை தருவாய் அம்மா

                                           (ஸ்ரீ ஜகதீஸ்வரி)

ஸ்ரீ சக்கர பிந்து வாசினி நீயே

பாப வினாசினி தாயும் நீயே

                                           (ஸ்ரீ ஜகதீஸ்வரி)