ஒரு முறை கண்டால்

ஒரு முறை கண்டாலே என்றுமே மறவாத

அற்புத தெய்வம் என் மணிகண்டனே

அந்த ஹரனார்க்கும் ஹரியார்க்கும் இணைந்த

சக்தியாய் பூலோகம் காண்பது ஓர் பாக்கியமே.

 

பன்னீரால் குளிக்கின்ற பொன் மேனியை

நாங்கள் நெய்யாலே அபிஷேகம் செய்திடுவோம்

பச்சிளம் தளிர் கொண்ட பூ மேனியை நாங்கள்

சந்தன குழம்பாலே நீராட்டுவோம்

 

யோகாசனத்திலே அமர்ந்தவன் பாதத்தில்

மாணிக்க பரல் கொண்ட தண்டை அணிவோம்

அபாயமும் சின்முத்திரை காட்டும் கைகளுக்கு                          

வைரம் பதித்த நல காப்பணிவோம்

 

பக்தனின் குறல் கேட்டு செவி சாய்க்கும் காதிற்க்கு                

ரத்தினத்தினாலே குண்டலங்கள்

அழகனாம் முருகனின் தம்பிக்கு அங்கே

நவ ரத்தினம் பதித்த கீரீடங்கள்

 

படி அளக்கும் பரந்தாமன் மகனுக்கு அங்கே

அரவன பாயச நெய்வேத்தியமே

பஞ்சாக்க்ஷரம் கொண்ட பரமனின் மகனுக்கு

பஞ்சமிருதம் கொண்டு படயலிட்டோம்