அப்பமுடன் அவல் பொரி

அப்பமுடன் அவல் பொரி கடலைகள் சமர்ப்பணம்

வந்திடுவாய் கணபதி அருள் தருவாய் குணநிதி

 

விக்னமேல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா கணபதி

வேதத்தின் அருள் பொருளே நீதானே அருள்நிதி

                                                (அப்பமுடன்)

செல்வமெல்லாம் தந்திடுவாய் செல்வராஜா கணபதி

சங்கடங்கள் தீர்த்து வெய்க்கும் சங்கடஹர கணபதி

                                                (அப்பமுடன்)

ஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் .....

ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்......

 

கணபதி பப்பா மோரிய மங்கள மூர்த்தி விநாயக

ஜெய் ஜெய் .................................... ஜெய் கணேச