ஈஸ்வர பீடத்தின் ஸ்தாபகரும் நாம் வணங்கி பின்பற்றும் குருவான ஸ்ரீ ராஜ ராஜேஷ்வர சுவாமிகளின் இஷ்ட தெய்வமான ஸ்ரீ லோக பகவதியின் ஆலயம் இக்கலியுகத்திலே அமைய இருப்பது பூலோகவாசிகலான நம் அனைவருக்கும் கிடைத்த அருட்ப்ரசாதம். தற்பொழுது இந்த அம்பிகைக்கு சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஈஸ்வர பீட ஆஷ்ரமத்திலே நித்ய பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆதியிலே உலகத்திற்கு தாயும் தந்தையுமான ஸ்ரீ வில்வாதிநாதர் மற்றும் மரகதாம்பிகையை நோக்கி தவம் புரிந்த ஸ்ரீ லோக பகவதி தற்பொழுது அருவமாக திருவள்ளூருக்கும் , ஊத்துக்கொட்டைக்கும் இடையே உள்ள மயிலாப்பூர் என்னும் சிறிய கிராமத்தில் லோக மாதாவாக அனைவருக்கும் அமைதி, கருணை, தாய்மை மற்றும் ஐஸ்வர்யம் போன்ற சகல சௌபாக்கியங்களையும் அவர்கள் கேட்காமலேயே அள்ளிக்கொடுத்து கொண்டு இருக்கிறாள்.
நம் குருநாதரின் வாக்கின்படி இந்த அம்பிகைக்கு அங்கு தேவர்களும் ரிஷிகளும் மற்றும் முனிவர்களும் சேர்ந்து நம் கண்களுக்கு புலப்படாமல் இன்றளவும் தினம்தோறும் பூஜையும் ஆராதனையும் செய்து வருகின்றனர்.
புண்ணிய புருஷர்களின் அகக்கண்களுக்கு மட்டும் தெரியும் இந்த அற்புத காட்சியை பாமர மக்களாகிய நாமனைவரும் கண்டு கரையேற இவ்விடத்திலே ஒரு பிரமாண்ட ஆலயம் அமைய வேண்டும் என்பது நம் குருநாதரின் தவமாகும்.
ஸ்ரீ ராஜ கம்பீர கணபதி , ஸ்ரீ கல்யாண முருகன், ஸ்ரீ லோக சாஸ்தா, ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ வில்வாதிநாதர், ஸ்ரீ புஜாக்கிரம மாருதி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் , ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கை , ஸ்ரீ ஹயக்ரிவர், ஸ்ரீ ஹரிஹரன் மேலும் பல சந்நிதிகள் அமையவுள்ள இந்த ஆலயதில் சிறப்பு அம்சமாக பதினொன்று அடி உயரத்தில் ஸ்ரீ லோக காருண்ய கணபதியும் மயிலை தீர்த்தத்தின் மத்தியில் மரகதாம்பிகையும் அருள்பாலிக்க உள்ளனர். ஸ்தல வ்ரிக்ஷமாக வன்னியும் வேம்பும் பிணைந்து உள்ளது.
ஆலய நிர்மாணத்தின் முதற் கட்டமாக ஸ்ரீ லோக காருண்ய கணபதி ஆலயம் அமைய உள்ளது . அவர் அகஸ்திய மாமுனி வழிபட்ட "கண் திருஷ்டி கணபதியாக" அருள்பாலிக்க உள்ளார். நம்முடைய அனைத்து தோஷங்களையும் போக்கி ஆலய நிறமான பணிகளில் ஏற்படும் தடைகளெல்லாம் நீக்கி கேட்பவருக்கு கேட்பதை கொடுக்கும் அருட்களஞ்சியமாக திகழ உள்ளார்.
இந்த ஆலயத்திலே பரமேஸ்வரர் மூன்று திருமேனியுடன் மூன்று திரு நாமம் கொண்டு அருள் பாலிக்க இருக்கிறார். நம் பாரத தேசத்தின் வட எல்லையில் சிந்து நதியில் தவழ்ந்து வந்த ஸ்ரீ தீர்த்தபுரீஷ்வரர் ஸ்தல வ்ரூக்ஷத்தின் கீழும், ஸ்ரீ வில்வாதிநாதர் மயிலை தீர்த்த கரையிலும் , உலகத்தை தன் இரு கரங்களால் அனைத்து காத்து வரும் ஸ்ரீ லோகேஷ்வரராக ஸ்ரீ லோக காருண்ய கணபதி உடன் அருள்பாலிக்க உள்ளார்.
ஸ்ரீ லோக பகவதியின் தோற்றம் எட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக பிரம்ம விஷ்ணு சிவசக்தி ஸ்வரூபினியாய் ஸ்ரீ சக்ர பீடத்திலே கம்பீரமாக அமைய இருப்பது நம் முன்ஜென்ம பாக்கியம்.
பொதுவாக ஆலய நிர்மான பணியில் நாம் நம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு ஏற்படுவது இறைவன் நமக்கு அளித்த அருட்கொடை. நம் எண்ணத்திற்கு ஏற்ப அவ்வாய்ப்பு அமைவது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.இந்த பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பது நம் குருநாதரின் விருப்பமாகும். அதனால் ஆன்ம நேயர்கள் அனைவரும் தங்கள் உடலாலும், திரவியங்களாலும் பொருளுதவியாலும் இவ்வாலய திருப்பணியில் கலந்து கொண்டு தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் இறைவனின் திருவடிக்கமலத்திலே நீங்காத இடத்தை அடைந்து அகமும் புறமும் பசுமை பெற தங்கள் திருவடி பணிந்து அழைக்கின்றோம்.
தங்கள் பங்களிப்பை காசோலையாக அல்லது வரைவு ஓலையாக ( CHEQUE / DD ) நீங்கள் செலுத்தலாம். ( IN FAVOUR OF "ESHWARA PEEDAM"). மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------
Estimated cost of Construction
SANNIDHI | Estimated Cost(Rs.) |
1. Raja Gambhira Ganapathi | 2,00,000 |
2. Kalyana Murugar | 3,00,000 |
3. Vilvadhinathar | 4,00,000 |
4. Hariharan | 2,50,000 |
5. Ashta Bhuja Durgai | 2,50,000 |
6. Hayagreevar | 2,50,000 |
7. Saneeshwarar | 2,50,000 |
8. Swarna Akarshana Bhairavar | 2,50,000 |
9. Sri Loka Shastha | 3,00,000 |
10. Navagraham | 2,00,000 |
11. Sri Loka Bhagavathy | 25,00,000 |
12. Raja Gopuram | 25,00,000 |
13. Mylai Pushkarini | 8,00,000 |
14. Compound Wall | 15,00,000 |