சென்னை அம்பத்தூர் பகுதியில் இயங்கிவரும் ஈஸ்வர பீடம் பல்வேறு ஆன்மிக திருப்பணிகளை
சிறப்புடன் நடத்தி வருகிறது. அகமும் புறமும் பசுமை பெறவேண்டி இவ்வமைப்பின் சார்பில்
பல்வேறு தொண்டுகளும் வழிபாடுகளும் நடை பெற்று வருகின்றன.
ஈஸ்வர பீடத்தின் ஸ்தாபகர் குருஜி திரு ராஜராஜேஸ்வர சுவாமிஜி அருளியதன் பேரில் அம்பத்தூர்
ஆன்மிக சமாஜம் "சத்சங்கம் மண்டபத்தில்" கடந்த 21/09/14 ஞாயிறு அன்று காலை 9.00 மணி
முதல் 4.00 மணி வரை உலக நன்மைக்காக சிவ பஞ்சாட்சர அகண்ட நாம ஜபம் சிறப்புடன் நடைப்பெற்றது
ஈஸ்வர பீடத்தின் உறுப்பினர்கள் , சிவலோகம் சிவனடியார்கள் மற்றும் பல ஆன்மிக அமைப்புகளை
சேர்ந்த பக்தர்களும் இதில் கலந்து கொண்டு ஆனந்தம் கொண்டனர்.அதிகாலை முதல் விழா
ஏற்பாடுகள் துவங்கப்பட்டு சரியாக 9.00 மணிக்கு சிவ பஞ்சாட்சரமான "நமச்சிவாய" நாமத்தை
இடைவிடாது உச்சரிக்கும் நாம ஜபம் துவங்கியது.அதே வேளையில் விழா மேடையில் பொன்னார்
மேனியனான சிவபெருமானுக்கு அகண்ட கங்காபிஷேகமும் நடைப்பெற்றது.
கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாகவும், பரபரப்பான வாழ்க்கைச்சுழலால் பழுதடைந்த
மனங்களுக்கு மருந்தாகவும் அமைந்திருந்தது இவ்வழிபாடு வேத வேள்வியோடும்
சிவனடியார்களின் திருமுறை விண்ணப்பதொடும் இவ்வழிபாடு நிறைவடைந்தபோது
கூடியிருந்தோரின் உள்ளமும் குளிர்ந்தது. வாடியிருந்த மண்ணும் வான்மழையால்
குளிர்ந்தது. அகமும் புறமும் பசுமை நிறைந்தது.
பொது இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, அவரவர் இல்லங்களிலும்
நடைபெறவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது ஈஸ்வர பீடம்