கவனம்

கவனம் என்பது நாம் நினைவு தெரிந்த நாள் முதல் நாம் அதிகமாக கேட்டுக் கொண்டு இருக்கும் ஒரு சொல். வீட்டில், பள்ளிகளில் நாம் வளர்ந்த பிறகு வேலைக்கு போகும் போது மற்றும் வயது முதிர்ந்து நம் கடைசி நாட்கள் வரை சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருமே கவனம் என்ற சொல்லை கவனமாக உபயோகித்து வருகிறோம். பெற்றோர்கள் நாம் பள்ளிக்கு போகும் பொது அல்லது வெளியே போகும் போதெல்லாம் “கண்ணா கவனமாக போக வேண்டும்” என்பார்கள். பள்ளியில் ஆசிரியர் “கவனமாக படிக்க வேண்டும் , நான் சொல்லும் பாடத்தை கவனி “ என்கிறார்கள். நாம் கூட நம் தாத்தா பாட்டி போன்றவர்கள் படிக்கட்டு; ஏறும் பொது அல்லது பேருந்தில் போகும் போது “ பார்த்து கவனமா பாட்டி” என்று சொல்வதுண்டு.

      ஒரு சமயம் வங்க தேசத்தில் ஓர் குறுநிலத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிக நேர்மையான அரசன் என்று அனைத்து நாட்டவராலும் போற்ற பட்டவன். போர் விதிகளை மீறாத கண்ணியம் நிறைந்த அரசன். அவரது நாட்டின் மீது அந்நிய படைகள் போர் தொடுத்தது. தன் நாட்டை காப்பாற்றுவதற்காக மன்னனும் போர் கோடி ஏற்றி வீர போர் புரிந்தான்.அவனது நாட்டின் பெரும் பகுதியை அவன் வீரத்தால் தக்க வைத்து வந்தான். மாலைசூரியன் மறைந்ததும் அப்போதய போர் விதிகளின்படி போர் செய்வதை நிறுத்தி , மாலை நேர குளியல் முடித்து மிகவும் பணிவுடன் அந்த பகுதியிலேயே சிவ பூஜை செய்து தியானத்தில் அமர்ந்தான்.    

அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு பெண்மணி அழுதுகொண்டு நான்கு புறமும் எதையோ தேடிக் கொண்டு ஓடி வந்தால். அந்த பெண்மணியிடம் ஒரு போர்வீரன் “ என்னம்மா என்ன விஷயம் ஏன் இப்படி ஓடுகிறீர்கள் “ என்று கேட்டார். அதற்க்கு அந்த பெண்மணி “ என் கணவர் ஒரு வியாபாரி அவர் வாணிபத்துக்காக மற்ற தேசங்களுக்கு சென்றிருக்கிறார் .அவருடன் சென்றவர்களெல்லாம் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் அவர் இன்னும் வரவில்லை.நாட்டில் போர் வேறு நடக்கிறது.எனக்கு மிகுந்த பயமாயிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தன கணவரை தேடி ஓட துடங்கினாள்.அந்த பெண்மணியின் கவனம் முழுவதும் அவள் கணவனை தேடுவதில் இருந்ததால் அவள் ஓடும் போது தியானத்தில் இருந்த ராஜாவை கூட பார்க்காமல் இடித்து தள்ளி விட்டு  ஓடினாள்.கீழே விழுந்த அரசனுக்கு மிகுந்த கோபம் வந்தது அவர் “ யார் அந்த பெண்? நான் நாடாளும் அரசன் என்று கூட பாராமல் என்னை இடித்து தள்ளி விட்டு ஒன்றும் செய்ததற்கு தகுந்த காரணம் கூறாவிடின் அவள் தலையை வெட்டி எறியுங்கள்” என்று உத்தரவு இட்டார். அதற்குள் அந்த பெண்மணி அவளது கணவனை சந்தித்து விட்டாள். காவலாளிகள் அந்த பெண்மணியை அரசரிடம் கொண்டு வந்தனர். அரசர் அந்த பெண்ணிடம் “ கவனம் அற்ற பெண்ணே நான் இங்கு இருப்பது உன் கண்களுக்கு தெரியவில்லையா ? எதற்கு என்னை இடித்து தள்ளி நான் கீழே விழுந்தது கூட தெரியாமல் ஓடினாய்? “ என்றார். பெண்மணி “ அரசே இதோ இவர்தான் என் கணவர் இவரை தேடித்தான் நான் ஓடினேன். இவரை மட்டும் என் கவனத்தில் வைத்து கொண்டிருந்ததால் நான் உங்களை கவனிக்க வில்லை” என்றாள். அரசன் “இதை எல்லாம் நான் ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளமுடியாது இவளுக்கு மரண தண்டனை தான் தகுந்தது. இது கவனம் இல்லாத அனைத்து பெண்களும் ஒரு பாடமாக அமையும்என்றார். அந்த பெண்மணியின் கணவர் “அரசே கருணை வையுங்கள், என் மனைவி மிக நல்லவள் அறியாது செய்த பிழையை மன்னியுங்கள்என்று அரசரிடம் மன்றாடினான். அரசன் “பேச்சுக்கு நேரம் இல்லை தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றான். பெண்ணின் தலை துண்டிக்க தயாராகி விட்டது. பெண்ணின் கணவன் அரசனின் கால்களில் விழுந்து கதறினான. அப்போது அரசன் “ நான் சாதாரண வேலையில் உள்ள போது இந்த செயல் நடந்திருந்தால் நான் இதை நிச்சயம் மன்னித்திருபேன் அந்நாள் நாம் ஆழ்ந்து தினத்தில்இருக்கும் போது நிகழ்ந்ததால் இதை நான் எப்படி மன்னிப்பது என்றார் அப்பொழுதுஅந்த பெண்மணி” அரசே நான் நாட்டையும் என் கணவரையும் மிகவும் மதிப்பவள் நாட்டை ஆளும் அரசரான நீங்கள் கடவுளுக்கு சமமானவர். நான் உங்கள் கட்டளையை மதிப்பவள். என் கணவனை பூஜிக்கும் தர்ம பத்தினி. நான் இறப்பதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதை தாங்களே தீர்த்து வைக்க வேண்டும்படி உங்களை வேண்டுகிறேன். இது என் கடைசி ஆசையும் கூட ஆகும்.என்றால். அரசர் “சந்தேகமா என்ன சந்தேகம்? கேள்என்றார். அதற்க்கு அந்த பெண்மணி “நான் என் கணவன் மீது இருந்த கவனத்தின் காரணமாக உங்களையும் பார்க்காமல் இடித்து விட்டேன் ,ஆனால் கடவுளை தியானித்துக் கொண்டிர்ந்த தாங்களால் எவ்வாறு உங்கள் கவனத்தை என் மீது திருப்ப முடிந்தது? இது தான் என்னுடைய சந்தேகம்என்றாள். இதை கேட்டதும் அரசர் தன் கைகளை கூப்பி “தாயே நான் எவ்வளவு பெரிய தவறை செய்ய இருந்தேன் என் மனக்கண்ணை திறந்து விட்டாய் கடவுளை வணங்கும் போது என் கவனம் கடவுள் மீது இல்லாமல் சிதறியதை சுட்டிக்காண்பித்து என் அறியாமையை போக்கினாய்” என்று உரைத்து தன தவற்றை உணர்ந்து மன்னிப்புக்கேட்டார்.  நாம் செய்யும் செயலில் கவனம் எந்த அளவிற்கு தேவை என்பதை உணர்ந்து கவனமாக இருப்போம்.

 NFL Jerseys Paypal