உங்களுடன் நான் - June 2015

சிவோஹம்,

     அன்பர்களே ஆசையை சீர்படுத்துவது எவ்வாறு என்பதை பார்போம் ஆசையை நாம்  பசுமையான, பசுமையற்ற என்று இருவகையாக பிரித்து கொள்ளலாம். தர்மத்திற்கு உட்பட்ட ஆசைகள் அனைத்தும் பசுமையான ஆசைகளென்றும் தர்மத்திற்கு புறம்பானஆசைகள் பசுமையற்றது என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கை வாழ்வதற்க்கு அத்தியாவசியமான தேவைகளை தர்மத்திற்க்கு,உட்பட்டு பெறுதலில் எந்த விதத்திலும் தவறில்லை. தர்மத்தை மீறிய ஆசைகள் அனைத்தும் பேராசை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அளவான ஆசையுடன் நாம் நமது தேவையை நிறைவு செய்வோமாயின், இயற்கைக்கு மாறான பசுமையற்ற ஆசையில் விழ அவசியமில்லை. ஆசையை அடக்க முற்பட்டால் அது சுலபமாக அடங்காது. ஆசையை ஆராய்ந்து, உணர்ந்து அது உதித்த இடத்திலேயே அதை விட்டு விட வேண்டும். இவையெல்லாம் நாம் தெளிவாக உணர்வதற்கு இறைவன்  நமக்கு ஆறாவதுஅறிவை தந்துள்ளார்.

 ஆறாவது அறிவென்பது நன்மை தீமை , விருப்பு வெறுப்பு, தர்மம் அதர்மம் போன்ற இருமை தன்மையை பகுத்து அறியும் தன்மை.அது மனிதனுக்கு மட்டும் கிடைத்திருக்கும் இறைவனின் கொடை.அதனை பயன்படுத்தி நாம் நம் ஆசையை சீர்படுத்த வேண்டும். ஆசையை சீர்படுத்த தடையாக இருப்பது சினமேயாகும். சினத்தை தவிர்ப்பது எவ்வாறேன்பதை அடுத்த  இதழில் பார்ப்போம்.

   

 

 

 NFL Jerseys Paypal under construction.