சிவோஹம்,
அன்பர்களே எப்படி இருக்கீங்க ? நலமாக இருக்கீங்களா?. இப்படி உங்க எல்லாரிடமும் நான் கேட்கும் பொழுது தங்களிடம் இருந்து வரும் பொதுவான பதில் “நலமாக இருக்கிறோம்சுவாமிஜி ” என்றுதான் இருக்கும். தனித்து காண்கையில் தங்கள் நலமின்மையை பிரச்சினையை சொல்வீர்கள்.
ஒரு கேள்விக்கு இருவித சூழ்நிலையில் இருவிதமான பதில்கள். இரு பதில்களும் சரியே, ஆனாலும் நலமாக இருக்கிறோம் என்று சொன்ன பதிலில் “இறையருளால்” என்று சேர்ந்து சொல்லும்போது ஒரு நிறைவு ஏற்படும், ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். இதை பழக்க படுத்துவது சுக துக்கங்களை ஓர் நிலையில் அணுகும் பக்குவத்தை கொடுக்கும்.
ஒரு ஓட்ட பந்தயத்தில் பத்து நபர்கள் கலந்து கொள்கிறார்கள். பத்து பேரின் மன ஓட்டமும் ஓட்டத்தில் முதலிடம் வரவேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் உண்மையில் ஒருவருக்கே முதலிடம் கிடைக்கும். முதலிடம் கிடைத்த நபருக்கு உண்டான அனுபவ நிலையும் அடுத்தடுத்து நிலையில் இருப்பவருக்கான மனநிலையும் வெவ்வேறே. ஆனாலும் அனைத்தும் அனுபவமே.கடைசி இடத்தில் வரும் நபர் அடுத்தடுத்து முயற்சிக்கு பிறகு முதலிடம் கிடைக்கும்பொது அவருக்கு ஏற்படும் அனுபவம் ஒரு பக்குவபட்ட மிக ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.
நமது வாழ்வில் நன்மை – தீமை, வரவு – செலவு, இன்பம் – துன்பம், லாபம் – நஷ்டம் போன்ற இருமை தன்மை காண படுகிறது. இதில் நமக்கு சாதகமான நிகழ்வு நடக்கும் பொது நாம் மகிழ்கிறோம் ஆனால் பாதகமான நிகழ்வு நடக்கும்போது நாம் மிகவும் வருந்துகிறோம். நாம் இந்த இரு நிகழ்வுகளையும் சற்றே விலக்கி வைத்து பார்த்தோமானால் இவை இரண்டுமே நமக்கு ஒருவித அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பது விளங்கும். இதில் நாம் மகிழ்வதற்கோ துக்கபடுவதர்க்கோ ஒன்றுமில்லை. இறைவனின் துணையுடன்
இந்த அனுபவ நிலைகளை சமமாக ஏற்கும் தன்மையை பெறுவதே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும்.
............நம் அகத்தையும் புறத்தையும் பசுமையாக்கும் பணியை நாம் தொடர்வோம்