உங்களுடன் நான் - April 2015

சிவோஹம்,

 

        அன்பர்களே நலமாக இருக்கிறீர்களா? ஆம் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம். இப்பொழுது நம்முள் இருக்கும் பரம்பொருள் உள்ளிருந்தே  நமதுநலத்தை உணர்த்துவதை உணரமுடிகிறது.

 

        இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையில் எற்பது சாத்தியமா என்பது நம்முள் பலருக்கும் எழும் கேள்வியே. இன்பம் வரும் போது மகிழ்வதும்  துன்பம் வரும் போது துயருருவதும் மனிதனின் இயல்பு என்று தானே நினைக்கிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனாலும் நம் எண்ணத்தின் ஓட்டத்தை சீர்படுத்தி சமமாக ஏற்கும் தன்மையை அடைவதே நம் முயற்சியாகும்.

 

பொதுவாக நாம் உண்ணும்போது நமக்கு ஓர் இன்பம் ஏற்படுகிறது. அதுவே பசித்தபின் ஏற்கும் உணவானது அதிக இன்பத்தை கொடுக்கிறது. நாம் பசியால் வாடும் போது ஏற்படும் துன்பமானது வயிறு நிறைய உண்ட பின்பு திருப்தியாக மாறுகிறது. ஆக உணவினால் நமக்கு துன்பமும் இன்பமும் உண்டாகிறது. வயிறு நிறைய உண்டவரிடம் நாம் மீண்டும் உணவு உண்ண சொன்னாள் போதும் வேண்டாம் என்று சொல்லுவார். இரண்டுமே ஒரு அனுபவ நிலைதான் என்று உணர முடிகிறது. இதில் வருந்துவதர்க்கோ மகிழ்வதர்க்கோ ஒன்றும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன். இங்கு உண்பதும், திருப்தி அடைவதும் பசியால் வாடுவதும் நம் உடல்தான் என்பதை நாம் உணர வேண்டும். அதுபோலவே மற்ற இருமை நிலைகளான சுக துக்கம், பெருமை சிறுமை, உயர்வு தாழ்வு போன்றவை நம் மனம் அனுபவிக்கும் அனுபவநிலைகளே.

 நாம் ‘நான்’ என்கின்ற எண்ணத்தை எப்பொழுதெல்லாம் பரம்பொருளிலிருந்து வேறுபடுத்தி கிழ்நிலையான உடலோடும் மனத்தோடும் பொருத்துகின்றோமோ அப்பொழுதெல்லாம் இந்த அனுபவ நிலைகள் நம்முள் பாதிப்பை ஏற்படுத்தும். நம் எண்ணம் மேலோங்கி இருந்து, உண்மை நிலையை நோக்கி பயனித்துக்கொண்டிருந்தால் இவ்வனுபவ நிலைகளை சமமாக ஏற்க முயற்சிக்கமுடியும். இல்லையேல் நியாய்த்திற்க்குள் ஒளிந்திருக்கும் அன்யாயத்தை அல்லது அன்யாயதிற்க்குள் ஒளிந்திருக்கும் நியாயத்தை நாம் காண தவறிவிடுவோம்.நம் எண்ணம் சீறாக இருந்தால் ஊசியின் சிறு தவாரத்தில் நூலை கோர்க்க இயலும் சிரற்று இருந்தால் அகலமான வாயிற்படியை கூட நம்மால் கடக்க இயலாது. நம் எண்ணத்தை சீற்படுத்துவது எவ்வாறு என்பதே நமது அடுத்த இலக்கு.

.............நம் அகத்தையும் புறத்தையும் பசுமை செய்யும் பணியை தொடர்வோம்.    

 NFL Jerseys Paypal