ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ....... ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ
ஐந்து கரத்தில் ஒரு கரத்தால் பாரதத்தை எழுதினாய்
பார்வதியின் பாலகனே கண் உறங்கு விநாயகா (ஆறிராரி)
கஜமுகனே கரிமுகனே காரிருள் அகற்றிடு
கவலையாவும் தீர்த்துவைக்கும் கண்மணி நீ கண்னுறங்கு (ஆறிராரி)
உன்னில் தொடங்கி செய்த காரியம் யாவும் இங்கு ஜெயம் ஐயா
வெற்றிவேலன் குக சரவணன் உந்தனுக்கு தம்பி௯ ஐயா (ஆறிராரி)
கமண்டலத்தின் காவிரியை புரண்டு ஓட செய்தவா
நதிக்கரையின் ஓரம் எங்கும் கொலு அமர்ந்த விநாயக (ஆறிராரி)