சிவாய பரமேஷ்வராய சசிசெகராய நம ஓம்
பவாய குண சம்பவாய சிவ தாண்டவாய நம ஓம்
அடிமுடி கானா அண்ணாமலையே அருணாசல சிவ ஓம்
அக்னிரூபமாய் அருளை தரும் எங்கள் அருணாசல சிவ ஓம்
ரமணரை தாங்கிய புண்ணிய பூமி அருணாசல சிவ ஓம்
ரணம் கொண்ட மனமாய் வந்த எங்களை காப்பாய் சிவ சிவ ஓம் (சிவாய)
பஞ்சபூதமும் ஓர் இடம் ஐக்கியம் அருணாசல சிவ ஓம்
பருத்தியை வந்து பழவினை ஓட்டும் பரமேஸ்வர சிவ ஓம்
பந்தமும் பாசமும் பற்றி இழுக்குது அருணாசல சிவ ஓம்
பற்றை அறுத்து பாதையை காட்டுது அருணகிரி சிவ ஓம் (சிவாய)
மலைதனை சுற்றி சித்தர்கள் கூட்டம் அருணாசல சிவ ஓம்
சிந்தனை முழுதும் சிவாயநம என சொல்வோம் சிவ சிவ ஓம்
மண் கொண்டு போகும் எங்கள் ஜென்மம் சிவ சிவ சிவ சிவ ஓம்
வின்னுடன் உயர்ந்த உந்தன் நாமம் சொல்வோம் சிவ சிவ ஓம் (சிவாய)
உன்னாமுலையால் உன் ஒரு பாகம் அருணாசல சிவ ஓம்
இந்த ஜென்மம் முழுதும் உன் நிழல் வாழ அருள்வாய் சிவ சிவ ஓம்
இந்திரபுரியே வியந்து பார்ப்பது அய்யனின் அருணகிரி
மண் உலகத்தில் அருணாசலமே அழகிய சொர்கபுரி (சிவாய)