தேனாலே பாலாலே அபிஷேகம் முருகா முருகா
வருவாயே வருவாயே செந்துரின் அழகா நீயே ( தேனாலே )
தேடி தானே கிடைத்தது தேவருக்கு அமிருதம் அன்று
தேடாமல் தந்தாயே பஞ்சாமிருதம் எங்களுக்கு ( தேனாலே )
செந்தூரில் ஆட்ச்சி செய்யும் செந்தில் வடிவேலவனே
சிக்கல் யாவும் தீர்த்து வெயக்கும் சிங்கார வேலவனே ( தேனாலே )
அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனே நீ முருகா முருகா
என்றும் எங்கள் குருவாய் இருந்து அருள்வாய் நீயே முருகா முருகா
( தேனாலே )
தேவருக்காய் அழித்தாயே சூரனை நீ அன்று
எங்கள் உள்ளே உள்ள சூரனை நித்தம் நித்தம் அழிப்பாயே ( தேனாலே )