சிவ சிவனே சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே
சிவ சிவனே சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே
கருவறை இருந்து புறவரை உலகம்
கண்டோம் நாங்கள் சிவ சிவனே
அழுதோம் புரண்டோம் சிரித்தோம் மகிழ்ந்தோம்
பல பல வேஷம் தினம் தினமே ( சிவ சிவனே )
மாயைகள் தேடி அலையும் இதுதான்
மனிதனின் பிறப்போ சிவ சிவனே
பந்தங்கள் பாசம் தேடியே அலைந்தோம்
முடிவினில் மாயை என்றறிந்தோம் ( சிவ சிவனே )
எங்கள் காமம் குரோதம் யாவும் அழித்து
ஞானக் கதவைத் திறந்திடு சிவா சிவனே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணம்
மாறுது காலப் போக்கினிலே ( சிவ சிவனே )
தேடு தேடு என்றே சொல்லுது
உள்ளில் உள்ள ஓர் உணர்வ
இறுதியில் அறிந்தோம் உணர்வாய்
வந்தது யாவும் இங்கு சிவா மயமே ( சிவ சிவனே )
(சிவ மயமே இங்கு சிவமயமே இங்கு பவபயம் இல்லை எங்கும் சிவமயமே)