அழகு அழகு எங்கள் கணபதி அழகு
ஐந்து கரத்தில் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு
ஒற்றைக்கொம்பில் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு
முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்க்கும் ராஜனின் மேனி பேரழகு
பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு
அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு
பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு
பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு
பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு
உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ........