பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி
கந்த காவடி முருக காவடி சந்தன காவடி
காவடிகள் ஆடிவரும் கூட்டத்திலே
கந்தா நீ வருவாய் அழகாக மயிலினிலே
பக்தர் கூட்டம் ஓடிவரும் மலையினிலே
அய்யா பழமாக நிற்கிறாய் நீ பழனியிலே
கந்தசாமி உன்னை கூறும் பொழுதினிலே
எந்தன் கவலையெல்லாம் போனது அந்த கரையினிலே
கருணை உள்ளம் கொண்ட உந்தன் அன்பினிலே
கந்தா நான் தவழ்வேன் உந்தன் வீட்டு திண்ணையிலே
வாக்கெடுத்து தந்த தெய்வம் வயலூரிலே
எந்தன் கனவில் கூட தெரிவது கந்தன் திருக்கோவிலிலே
தினைமாவாய் இனிக்குது உந்தன் திரு நாமம்
கந்தா நான் வருவேன் உன் வாசல் தினம் தோறும்