ஹர ஹர ஹர ஷண்முக நாதா

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஷண்முக நாதா

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஷண்முக நாதா

 

குன்றெல்லாம் விளையாடும் ஷண்முக நாதன்

அவன் வேலேதுத்து விளையாடும் என் உயிர் தோழன்

என் நெஞ்சில் நீங்காத புனிதமானவன் அந்த

வெள்ளயங்கிரி ஈசனுக்கு இஷ்ட பாலகன் ( ஹர ஹர )

 

மாயம் செய்யும் மாதவனோ மாமன் அல்லவா

அதனால் மாயமாக வந்து நம் மனக்குறை தீர்ப்பான்

தாயுமான சுவாமி அவன் தந்தை அல்லவா

அதனால் தாயாக மாறி நம் கவலை போக்குவான் ( ஹர ஹர )

 

பிரம்மனையே சிறை அடைத்த பால ஷண்முகா

எந்தன் பாவங்களை தீர்த்திடவே மயிலில் ஏறிவா

கஜமுகனாம் கணபதிக்கு தம்பியானவா

காத்திடும் உன் வேல் எடுத்து விரைந்து ஓடிவா ( ஹர ஹர )

 

கோடி மக்கள் உந்தன் பக்தர் கோலாகலா

இருப்பின் ஏழை எந்தன் உள்ளத்திலே ஆட்சி செயய்பவா

சிவா சக்தி பிள்ளையாக கயிலை வாழ்பவா

கருணையுடன் எங்களையே காத்து ஆள்பவா ( ஹர ஹர )

 NFL Jerseys Paypal