கந்தா கடம்பா குகா கார்த்திகேயா
வேல் எடுத்த நாயகனே சூரசம்ஹாரா (வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)
பழனி மலை இருப்பது உந்தன் பண்டாரக்கோலம்
பார்பவர்கள் மனமகிழ்வது உந்தன் ராஜ அலங்காரம்
(வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)
செந்தூரில் ஆட்சி செய்யும் செந்தில் குமரா
சிங்கார வேலவனே சிக்கல் ஷண்முகா
செந்தூரில் வீற்றிருக்கும் சூரசம்ஹாரா
செய்த பாவம் போக்கவல்ல எங்கள் தோழா
(வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)
ஆறுபடை வீடுனக்கு கந்கா குமரா
ஆறுதலாய் என்றுமிருப்பாய் எங்கள் கந்தா
உந்தன் புகழ் பாட தோன்றும் உந்தன் வடிவமே
எந்தன் நெஞ்சில் உறைந்தது உந்தன் கந்தக்கோட்டமே
(வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)
தரணியைக் காப்பவரே தனிகாச்சலா
தடையின்றி உந்தன் நாமம் சொல்ல வரம் தா
தடம்புரண்டு ஓடும் எங்கள் மனநிலைதனையே
சீர்படுத்தி வைக்குதப்பா உந்தன் கருணையே
(வேல் முருகா .வேல் முருகா வேல் வேல்)