ஸ்ரீ ஜகதீஸ்வரி ராஜராஜேஸ்வரி
ஸ்ரீ ஜகதீஸ்வரி ராஜராஜேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகே ஜெய சரணம்
அருள்வாய் நீயே அம்பிகை தாயே
அபயம் அளிக்கும் அன்னையும் நீயே
(ஸ்ரீ ஜகதீஸ்வரி)
அனைத்துலகிற்க்கும் தாய் நீ அம்மா
ஆதியும் அந்தமும் நீயே அம்மா
உன் மலர் பாதம் அபயம் அம்மா
(ஸ்ரீ ஜகதீஸ்வரி)
இடக்கை கரும்பு அதனை போல
இனிக்கும் வாழ்வினை தருவாய் அம்மா
(ஸ்ரீ ஜகதீஸ்வரி)
ஸ்ரீ சக்கர பிந்து வாசினி நீயே
பாப வினாசினி தாயும் நீயே
(ஸ்ரீ ஜகதீஸ்வரி)
வா முருகா
வா முருகா வா அருள் தா முருகா தா
வா முருகா வா அருள் தா முருகா தா
சிவ சுப்ரமணிய சாமி எங்கள் முன்னே ஓடிவா
கருனையான பண்ணிரு கண் விழியினிலே காணவா (வா முருகா)
செந்தில் வடிவேலவனே சண்முகனே கந்தய்யா
பழனிமலை விற்றிருக்கும் பால தன்டாயுதா (வா முருகா)
ஊமைக்கருள் புரிபவரே வயலுரின் முருகைய்யா
எட்டு குடி வேலவனே ஏழைகளின் காவலா (வா முருகா)
காவடிகள் ஆட்டம் கண்டு மகிழ்ந்திடும் வடிவேலவா
காரினை வடிவம் கொண்டவனே கண்கண்ட நாயகா (வா முருகா)
சூரவதம் புரிந்தவனே செந்தூரின் காவலா
அலை கடலின் ஓரத்திலே அழகு செய்யும் வேலவா (வா முருகா)
அடங்காமல் அலைந்தாடும் எங்கள் எண்ணம் நேர் பட
அழகு செய்யும் சேவர் கொடி வந்து அருள செய்யப்பா. (வா முருகா)