கணபதி தாலாட்டு

ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ....... ஆறிராரி ஆறிரோ ஆறிராரிரோ

ஐந்து கரத்தில் ஒரு கரத்தால் பாரதத்தை எழுதினாய்

பார்வதியின் பாலகனே கண் உறங்கு விநாயகா     (ஆறிராரி)

 

 

கஜமுகனே கரிமுகனே காரிருள் அகற்றிடு

கவலையாவும் தீர்த்துவைக்கும் கண்மணி நீ கண்னுறங்கு (ஆறிராரி)

 

உன்னில் தொடங்கி செய்த காரியம் யாவும் இங்கு ஜெயம் ஐயா

வெற்றிவேலன் குக சரவணன் உந்தனுக்கு தம்பி௯ ஐயா   (ஆறிராரி)

 

கமண்டலத்தின் காவிரியை புரண்டு ஓட செய்தவா

நதிக்கரையின் ஓரம் எங்கும் கொலு அமர்ந்த விநாயக (ஆறிராரி)

சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்

சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம் நித்தம் நித்தம் ஜபோ ஜபோ

கந்த சரணம் சஷ்டிக்கவசம் சொல்லிட பயங்கள் சலோ சலோ

                                                (சுக்லாம் பரதரம்)

நம சிவாய நாமம் சொல்ல வாழ்வில் என்றும் சுகமயமே

தீனடயலன் ராமனின் நாமம் சொல்ல நமக்கு ஜெயம் ஜெயமே

                                                (சுக்லாம் பரதரம்)

சக்தி பார்வதி அம்பிகை நாமம் சொல்லிட நமக்கு மங்கலமே

மகாலட்ச்மி சோத்திரம் சொல்ல செல்வக்குவியல் சுகபோகமே

                                                (சுக்லாம் பரதரம்)

நாளும் வெற்றி கண்டிடவே நாம் நந்தி தேவனை வணங்கிடுவோம்

வீரமும் தீரமும் பெற்றிடவே நாம் ஆஞ்சநேயன் பதம் பற்றிடுவோம்

                                                (சுக்லாம் பரதரம்)

அப்பமுடன் அவல் பொரி

அப்பமுடன் அவல் பொரி கடலைகள் சமர்ப்பணம்

வந்திடுவாய் கணபதி அருள் தருவாய் குணநிதி

 

விக்னமேல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா கணபதி

வேதத்தின் அருள் பொருளே நீதானே அருள்நிதி

                                                (அப்பமுடன்)

செல்வமெல்லாம் தந்திடுவாய் செல்வராஜா கணபதி

சங்கடங்கள் தீர்த்து வெய்க்கும் சங்கடஹர கணபதி

                                                (அப்பமுடன்)

ஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் .....

ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்......

 

கணபதி பப்பா மோரிய மங்கள மூர்த்தி விநாயக

ஜெய் ஜெய் .................................... ஜெய் கணேச

கருவறை இருந்து புறவரை உலகம்

சிவ சிவனே சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே

சிவ சிவனே சிவ சிவனே சிவ சிவ சிவ சிவ சிவ சிவனே

 

கருவறை இருந்து புறவரை உலகம்

கண்டோம் நாங்கள் சிவ சிவனே

அழுதோம் புரண்டோம் சிரித்தோம் மகிழ்ந்தோம்

பல பல வேஷம் தினம் தினமே                  ( சிவ சிவனே )

 

மாயைகள் தேடி அலையும் இதுதான்

மனிதனின் பிறப்போ சிவ சிவனே

பந்தங்கள் பாசம் தேடியே அலைந்தோம்

முடிவினில் மாயை என்றறிந்தோம்               ( சிவ சிவனே )

 

எங்கள் காமம் குரோதம் யாவும் அழித்து

ஞானக் கதவைத் திறந்திடு சிவா சிவனே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணம்

மாறுது காலப் போக்கினிலே                           ( சிவ சிவனே )

 

தேடு தேடு என்றே சொல்லுது

உள்ளில் உள்ள ஓர் உணர்வ

இறுதியில் அறிந்தோம் உணர்வாய்

வந்தது யாவும் இங்கு சிவா மயமே               ( சிவ சிவனே )

 

(சிவ மயமே இங்கு சிவமயமே இங்கு பவபயம் இல்லை எங்கும் சிவமயமே)

under construction.